நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் மாதத்தின் இறுதி நாட்களான 27, 28, 30, 31 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு நாளில் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாமதமாக தொடங்கப்பட்டதால் விவசாயிகள் அதிருப்தி இந்த நிலையில், இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க திரண்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய கூட்டம் அலுவலர்கள் தாமதம் செய்ததன் காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது. இதனால் பல விவசாயிகள் கூட்ட அரங்கில் அமராமல் ஆட்சியர் வளாகத்தில் அங்கும் இங்குமாக கலைந்து சென்றனர்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாமதமாக தொடங்கப்பட்டதால் விவசாயிகள் அதிருப்தி இது பற்றி பேசிய விவசாயிகள், குறைதீர் கூட்டத்தை எப்போதுமே அறிவித்த நேரத்தில் தொடங்காமல் தாமதம் செய்வதையே அலுவலர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர் என்று வேதனை தெரிவித்தனர்.