மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுகாக்களில் நிலத்தடி நீர், ஆற்றுப்பாசனம் மூலம் 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் உழவர்கள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். தற்போது குறுவையை அறுவடை செய்யும் பணிகளில் உழவர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
ஆண்டுதோறும் குறுவை சாகுபடி நெல்லை கொள்முதல் செய்வதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கோனேரிராஜபுரம், சிவனாகரம் உள்ளிட்ட 28 கிராமங்களில் மட்டுமே கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை மாவட்டத்தில் பல்வேறு அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக கொண்டுசென்று அடுக்கிவைத்து காத்திருக்கின்றனர்.
ஆனால், பெயரளவிற்கு மட்டுமே கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதாகவும், திறக்கப்பட்ட பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யவில்லை என்றும் உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.