தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கழுத்தை நெரித்த கூட்டுறவு வங்கிக் கடன்: விவசாயி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நாகப்பட்டினம்: விவசாய பணிகளுக்காக வாங்கிய கடன் சுமையை தாங்க முடியாமல் விவசாயி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

farmer
விவசாயி

By

Published : Jan 23, 2021, 6:29 PM IST

சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 88 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகின. திருக்குவளை அடுத்த மோகனாம்பாள்புரத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷ்பாபு (58), அவரது 10 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிரும் வயலில் சாய்ந்து சேதமாகின. இதனால் விரக்தியடைந்த விவசாயி ரமேஷ்பாபு இன்று அதிகாலை வீட்டை விட்டு வெளியேறினார்.

வெகுநேரமாகியும் தந்தையைக் காணவில்லை என அவரது மகன்கள் ஊர் முழுக்க அவரை தேடியுள்ளனர். இதனிடையே, திருச்சியிலிருந்து காரைக்கால் சென்ற எர்ணாகுளம் அதிவிரைவு ரயில் முன்பு பாய்ந்த விவசாயி ரமேஷ்பாபு தற்கொலையால் உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட ரயில்வே காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தனது 10 ஏக்கர் விளை நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிரும் சேதமான நிலையில், கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனை அடைக்க வழி தெரியாமல் விவசாயி ரமேஷ் தற்கொலை செய்துள்ளார் என காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிங்க:20 லட்சம் ரூபாய்க்காக விவசாயியை கிணற்றில் வீசிய கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details