நாகை மாவட்டத்தில், வடக்கு மாவட்ட தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ராஜ்குமார் தலைமையில் ஒரு அணி, முன்னாள் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் என்பவர் தலைமையில் மற்றொரு அணி என இரண்டு கோஷ்டிகள் உள்ளன.
காங்கிரஸ் கட்சியினரிடையே வெடித்த கோஷ்டி மோதல்! - rajkumar
நாகை: தேர்தல் பணிகளில் சரிவர ஈடுபடாததால் நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜ்குமாரை மாற்ற வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் முன்னாள் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக பண்ணை சொக்கலிங்கம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியரால் அறிவிக்கப்பட்டார். இதற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக பண்ணை சொக்கலிங்கத்தை அறிவித்து கே.எஸ்.அழகிரி அறிவிப்பு வெளியிட்டார்.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், பண்ணை சொக்கலிங்கம் தலைமையில் மயிலாடுதுறையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார் தேர்தல் பணிகளில் சரிவர ஈடுபடவில்லை. கடந்த முறை திமுக தோல்விக்கு மறைமுகமாக செயல்பட்ட அவரை மாற்ற வேண்டும். மாற்றவில்லை என்றால் காங்கிரஸ் கட்சியினர் தஞ்சை தொகுதியில் தேர்தல் பணியாற்ற மாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர்.