மயிலாடுதுறை: மன்னம்பந்தல் திருக்குளத்தெருவில் குடியிருந்து வருபவர்கள் தமிழ்செல்வன், சுதா தம்பதி. இவர்கள் குடியிருந்த வீட்டை கங்கா என்பவரிடம் ரூ. 12 லட்சம் கொடுத்து வாங்கியதாகவும், அதே வீட்டை இவர்களுக்கு முன்பே மூங்கில்தோட்டம் மெயின்ரோட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவவீரர் பழனிவேல் வாங்கியதாகவும் இவர்கள் இருவரிடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சனை தொடர்பாக நேற்று (ஜுன். 7) பழனிவேல், சுதா வீட்டிற்கு சென்று வீட்டை காலி செய்ய சொல்லி வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். அதோடு சுதா, அவரது கணவர் தமிழ்செல்வன் ஆகியோரை தாக்கிய முன்னாள் ராணுவவீரர் தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.