நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் மதன் (35). அதிமுக நிர்வாகியான இவர், தற்போது மணல்மேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநராக உள்ளார். இவர் மணல்மேடு பேரூராட்சி துணைத் தலைவராக இருந்தபோது நடந்த உட்கட்சித் தேர்தல் தொடர்பாக அப்போதைய மீன்வத்துறை அமைச்சர் ஜெயபாலுக்கும், மதனுக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
அதிமுக நிர்வாகியை ஆபாசமாக திட்டிய முன்னாள் அமைச்சர்! - அதிமுக நிர்வாகிட
நாகப்பட்டினம்: முன்விரோதம் காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர், தன் கட்சி நிர்வாகிக்கே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சீர்காழியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல திருமணவிழாவில் கலந்து கொள்ள மதன் வந்திருந்தார். அப்போது மண்டப வாயிலில் அவரை வழிமறித்த முன்னாள் அமைச்சர் ஜெயபால் மற்றும் முன்னாள் அதிமுக நகரச் செயலாளர் குடல் குமார் என்கிற வேணுகோபால் ஆகியோர் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக பாதிக்கபட்ட மதன் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் மற்றும் குடல் குமார் ஆகியோர் மீது சீர்காழி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இவரது புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த சீர்காழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.