நாகப்பட்டினம்விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்தி தேசிய மொழிகளில் அதுவும் ஒன்று. 1932 முதல் இந்தி திணிப்பை எதிர்த்து வருகிறோம். இயற்கை முறையில் விவசாயம் இந்தியாவில் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார்.
இலங்கையில் இயற்கை முறையில் விவசாயம் செய்த காரணத்தால்தான் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறார்கள். மோடிக்கும், அமித்ஷாவுக்கும் இந்தி பேசும் மாநிலங்கள்தான் தேவை, இந்தியாவில் உள்ள மாநிலங்கள் தேவை இல்லை. மோடியை எதிர்க்கும் மிகப்பெரிய சக்தியாக, எதைப் பற்றியும் கவலைப்படாமல் தமிழ்நாடு மக்களின் உரிமைகளைக் காக்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார்.
இவிகேஎஸ் இளங்கோவன் ஸ்டாலின் நாங்களும் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக அதிமுக வரி உயர்வு போராட்டங்களை தமிழ்நாட்டில் நடத்தி வருகிறது. வரி உயர்வு ஏன் என்பதைத் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தெளிவாக விளக்கி இருக்கிறது. எடப்பாடி மற்றும் ஓபிஸ் எவ்வளவு முயற்சி செய்தாலும், ஸ்டாலின் அளவிற்கு உயர்ந்து நிற்க முடியாது" என்றார். மேலும், புதுச்சேரி மற்றும் சென்னையில் ஆளுநர்களின் செயல்பாடுகள் ரொம்ப மோசமாக உள்ளது.
நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்ப மறுத்தவர் தமிழ்நாடு ஆளுநர். அரசியல் சாசனத்தின் படி நடக்கத் தெரியாமல், தான்தோன்றித் தனமாகத் தமிழ்நாடு ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தினமும் உளரிக் கொண்டுள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் எல்.முருகனுக்கு பதவி கிடைத்தது போல தானும் பதவி பெறவே பாஜக தலைவர் அண்ணாமலை தினமும் திமுகவிற்கு எதிராகப் பேசி வருகிறார். அந்தமானில் ஆளுநர் பொறுப்பு வாங்க அண்ணாமலை துடிக்கிறார்” என்றார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக மாவட்ட கட்சி - ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து பேசிய அவர், பாஜக தலைவர் அண்ணாமலைக்குத் தகுந்த இடம் திருவண்ணாமலை. அங்கே பல சித்தர்கள் இருக்கிறார்கள். அங்கே இவரும் ஒரு சித்தராக வலம் வரலாம். தமிழ்நாடு அரசியலைப் புரட்டி விடலாம் என அண்ணாமலை பேசி வருகிறார். 150 ஆண்டுக்கால அரசியலைப் பின்பற்றுகின்ற மாநிலம் தமிழ்நாடு. இங்கே குஜராத்தைப் போலவே, உத்திர பிரதேசத்தைப் போல மடத்தனமாக மக்கள் இல்லை. தமிழ்நாடு மக்கள் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள்.
அண்ணாமலையின் சத்தங்களுக்குச் செவி சாய்த்து விரைவில் மோடி ஒரு அரசாங்க பதவியை கொடுப்பார். தமிழ்நாட்டில் நாங்கள் தான் பெரிய கட்சி என்று அண்ணாமலை கூறிவருவது சூரியனை பார்த்து ஏதோ குரைப்பது போல் உள்ளது. திமுக, அதிமுகவிற்கு அடுத்து தமிழ்நாட்டில் மூன்றாவது கட்சி காங்கிரஸ் தான், தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக அகில இந்திய கட்சி அல்ல, மாவட்ட கட்சி" என்றார்.
இதையும் படிங்க: வெறுப்பு, வன்முறை நாட்டை பலவீனப்படுத்தும்- ராகுல் காந்தி!