தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூ பறிக்கச் சென்ற பெண்... மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு! - மின்சாரம் தாக்கி பலி

நாகப்பட்டினம்: பூ பறிக்கச் சென்ற பெண் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

electric shock death
electric shock death

By

Published : Aug 1, 2020, 8:28 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன் புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி புஷ்பவள்ளி. இவர் பக்கத்து கிராமமான கருப்பம்புலம் மேலக்காடு தோட்டத்தில் மல்லிகைப் பூ பறிக்கும் பணி செய்துவருகிறார்

இச்சூழலில் இன்று (ஆகஸ்ட் 1) வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது, அப்பகுதியில் செல்லும் மின் கம்பி அறுந்து புஷ்பவள்ளியின் தலையில் விழுந்தது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கரும்பம்புலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

இளம்பெண் தற்கொலை: காதலன் கைது

அங்கிருந்து அவர் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

இச்சம்பவம் குறித்து வேதாரண்யம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பூ பறிக்கச் சென்ற கூலித் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details