தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகை வாக்காளர்கள் சந்தேகங்களைத் தீர்க்க இந்த எண்ணை தொடர்புகொள்ளலாம்...! - voters election control room

நாகை மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் தொடர்பான புகார்களைப் பெற கண்காணிப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.

நாகை
நாகை

By

Published : Nov 6, 2020, 1:38 PM IST

Updated : Nov 6, 2020, 1:49 PM IST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, மயிலாடுதுறை, வேதாரண்யம், பூம்புகார், கீழ்வேளூர், சீர்காழி ஆகிய ஆறு சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் உள்ள பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவித்திடவும், தகவல்களைப் பரிமாறிடவும், பரிந்துரைகளை எடுப்பது மற்றும் புகார்களை பதிவு செய்திடவும், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்பு அறை திறக்கப்பட்டு உள்ளது. வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை இங்கு புகார் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

1950என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு பொதுமக்கள் தொடர்புகொண்டு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், ஒரு சட்டப்பேரவை தொகுதியிலிருந்து மற்ற சட்டப்பேரவை தொகுதிக்கு வாக்காளர் பதிவு மாற்றம், வாக்காளர் அட்டையில் புகைப்படம் மாற்றம் தொடர்பான எல்லாவிதமான சந்தேகங்களையும் வாக்காளர்கள் தீர்த்துக்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 80 வயதிற்கும் மேற்பட்ட முதிய வாக்காளர்கள் இத்தனை லட்சமா...!

Last Updated : Nov 6, 2020, 1:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details