நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் மீன்பிடி துறைமுகம் உள்ளது. நாள்தோறும் இங்கு 500க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 40க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகள் , அரசால் தடைசெய்யப்பட்ட சீன என்ஜின், சுருக்கு மடிவலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதுடன், விசைப்படகுகள் மீன்பிடிக்கும் இடங்களில் மீன்பிடிப்பதால் 250க்கும் மேற்பட்ட விசைபடகு மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி காலவரைற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீனவர்களிடையே கல்வீச்சு; காவலர்கள் குவிப்பு! - சீன எஞ்ஜின்
நாகை: தடை செய்யப்பட்ட சீன என்ஜின், சுருக்கு மடிவலைகளைப் பயன்படுத்துவதாகக் கூறி மீனவர்களிடையே கல்வீச்சு நடைபெற்றது.
மேலும், இது போன்ற தவறான செயலில் ஈடுபடும் ஆழ்கடல் சுருக்குமடி படகு உரிமையாளர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை எனவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சாட்டினர். உடனடியாக சீன என்ஜின்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், சுருக்கு மடிவலை பயன்படுத்தி மீன்பிடித்து வந்த படகுகளை துறைமுகத்தில் நிறுத்தவிடாமல் தடுத்ததால் மீனவர்களுக்கிடையே வாகுவாதம் முற்றி கல்வீச்சு நடைபெற்றது. இதனையடுத்து பதற்றமான சூழல் உருவானதால் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் வந்தனா தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.