தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் ஆணவத்தில் முருகன் பேசுகிறார்” - ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் - நவம்பரில் பொது வேலை நிறுத்தம்

நாகப்பட்டினம் : மத்தியில் ஆட்சியில் இருக்கும் அதிகாரத்தில் ஆணவத்தோடு பாஜக தலைவர் முருகன் பேசி வருவதாக சிபிஎம் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

cpim g ramakrishnan
சிபிஎம் ஜி.ராமகிருஷ்ணன்

By

Published : Oct 10, 2020, 2:57 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது கரோனாவைத் தடுப்பதிலும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதிலும் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும், வரும் நவம்பர் 25ஆம் தேதி வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி பொது வேலை நிறுத்தம் நடைபெற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து, பொன். ராதாகிருஷ்ணன் திமுகவோடும், பாஜக தலைவர் முருகன் அதிமுகவோடும், ஹெஜ்.ராஜா மத்திய தலைமை முடிவு எடுக்கும் எனவும், வானதி சீனிவாசன் புதிய கட்சியோடு கூட்டணி என்றும் வெவ்வேறு கருத்துக்களைக் கூறி வருகின்றனர்” என பாஜக கூட்டணி நிலைப்பாடு குறித்து விமர்சித்தார்.

சிபிஎம் ஜி.ராமகிருஷ்ணன் பேசிய காணொலி

பாஜக கை நீட்டும் கட்சியே தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் என்று பாஜக மாநில தலைவர் முருகன் கூறிய கருத்துக்கு பதில் அளித்த அவர், ”மத்தியில் பாஜக அதிகாரத்திலிருக்கும் ஆணவத்தோடு பாஜக தலைவர் முருகன் பேசி வருகிறார். தமிழ்நாட்டில் பாஜக தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், ”அதிமுகவை மிரட்டுவதற்கே பாஜக தலைவர் முருகன் இதுபோன்று பேசி வருகிறார்” என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : ’அதிமுகவிற்கு மரண அடி கிடைக்கும்’ - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

ABOUT THE AUTHOR

...view details