தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொள்ளிடம் கூட்டு குடிநீரை குடித்த மக்களுக்கு வாந்தி பேதி! - அரசு மருத்துவமனை

நாகப்பட்டினம்: கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட நீரை பருகிய 5 கிராம மக்களுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் வேதாரண்யத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

File Pic

By

Published : Mar 14, 2019, 8:03 PM IST

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதிகளில் உள்ள கிராமத்தினர் குடிநீர் தேவைக்காக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். வேதாரண்யம் மற்றும் கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், அகஸ்தியன்பள்ளி, தகட்டூர் ஆகிய கிராமங்களில் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் இந்த குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இக்குடிநீரை குடித்த கிராம மக்கள் வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டது. இவர்கள் தற்போது சிகிச்சைக்காக வேதாரண்யம், நாகை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் ஆறுதல் கூறினார். தொடர்ந்து மருத்துவர்களின் சிகிச்சை குறித்து கேட்டறிந்த அவர், உயர் சிகிச்சை வழங்க அறிவுறுத்தினார்.

File pic

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குடிநீரை குடித்து வாந்தி மயக்கம் ஏற்பட்டு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details