நாகை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத்தொகுதி வாரியாக, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பல்வேறு இடங்களில் இன்று இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
இந்நிலையில், நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட அஞ்சுவட்டத்தம்மன் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பயிற்சியை நாகை மாவட்ட ஆட்சியரும், மயிலாடுதுறை மக்களவைத்தொகுதி தேர்தல் அலுவலருமான சுரேஷ்குமார் பார்வையிட்டார்.
அப்போது அவர் பேசுகையில், ஏற்கனவே பல தேர்தல்களை சந்தித்திருந்தாலும், இம்முறை ஒப்புகைச்சீட்டு இயந்திரம் என்னும் வாக்குகள் சரிபார்க்கும் இயந்திரம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள் நிதானமாக பதற்றமின்றி பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், முதல் முறையாக தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், இந்தப் பயிற்சி வகுப்பினை பயன்படுத்திக்கொண்டு மின்னணு வாக்கு இயந்திரத்தை தைரியமாக கையாண்டு எந்த ஒரு அச்சமோ, சந்தேகமோ இல்லாமல் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதையடுத்து, பயிற்சியில் ஈடுபட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் மூலம் தங்களது வாக்குகளைப் பதிவிட்டனர்.