நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா பெருமாள் கோயில் தெற்கு வீதியில் உள்ள ரேசன் கடையில் 65 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் 20 கிலோ இலவச ரேசன் அரிசியை வாங்கியுள்ளார். அந்த அரிசி குண்டரிசியாக இருப்பதாக கூறி சாலை ஓரத்தில் நடந்தபடியே கொட்டியுள்ளார். இதைக் கண்ட ஒரு பெண் ஏன் அரிசியை கீழே கொட்டுறீங்க என்று கேட்டதற்கு, அரிசிங்கிர பேருல குண்டரிசி கொடுக்குறான், அத சாப்பிடமுடியுமா சோறுவடிச்சி, மனிஷன் சாப்பிட முடியாது, ஆடுமாடாவது திங்கட்டுன்னுதான் ரோட்டுல கொட்டினேன்.
முதியவரின் இந்த செயலை பார்த்த நபர் ஒருவர் அதை வீடியோவாக எடுத்துள்ளார். இதையறிந்த அந்த முதியவர் வீடியோ எடுத்துவிட்டியாடா, வாட்ஸ்ஆப்பில் அனுப்பு என்று கூறிவிட்டு சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.