தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணப்பட்டுவாடா செய்த இருவர் கைது - பறக்கும் படை

நாகப்பட்டினம்: சீர்காழியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த திமுக மற்றும் விசிக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

பணப்பட்டுவாடா செய்த இருவர் கைது
பணப்பட்டுவாடா செய்த இருவர் கைது

By

Published : Apr 4, 2021, 6:22 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அகரதிருகோலக்கா தெருவில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரி சிவாஜி தலைமையிலான குழுவினர், அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த திமுக வார்டு பிரதிநிதி ராஜகௌதமன் மற்றும் விசிக நிர்வாகி மணிமாறன் ஆகிய இருவரும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து ரூ.7500 ரொக்கம், வாக்காளர் பட்டியல், உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அவர்களை சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:'உதயநிதி வெற்றி பெற்றால்தான் நான் முதலமைச்சர்'- மக்களிடம் ஸ்டாலின் உருக்கம்

ABOUT THE AUTHOR

...view details