நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, கணித கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 90 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு 150-க்கும் மேற்பட்ட படைப்புகளை உருவாக்கி காட்சிப்படுத்திருந்தார்கள்.
மேலும், கண்காட்சியை மயிலாடுதுறை கல்வி மாவட்ட அலுவலர் குமரன் தொடங்கிவைத்து பார்வையிட்டார். இதில், சோலார், டைனமோவில் இயங்கும் சைக்கிள், சிறுநீரில் மின்சாரம் தயாரித்தல், சோலார் சக்தியில் இயங்கும் வாகனங்கள், சந்திரயான் 3 செயற்கைக்கோள் ரேன்டர் மூலம் விண்ணில் தரையிறங்குவது போன்ற மாதிரிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.