தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடு, வீடாக சென்று கரோனா பரிசோதனை: மாவட்ட ஆட்சியர் லலிதா

மயிலாடுதுறை: வீடு, வீடாக சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.

வீடு, வீடாக சென்று கரோனா பரிசோதனை
வீடு, வீடாக சென்று கரோனா பரிசோதனை

By

Published : Jun 11, 2021, 9:08 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில் கரோனா தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதாமுருகன் முன்னிலையில் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் லலிதா வழங்கினார்.

முன்னதாக அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிக அளவில் உள்ள 10 மாவட்டங்களில் மயிலாடுதுறை மாவட்டமும் உள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தற்பொது சராசரியாக 100 பேரில் 15 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்த ஊராட்சி அளவில் வீடு வீடாக சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

வீடு வீடாக கணக்கெடுப்பு பணிக்கு தேவையான உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி, முகக்கவசங்கள், கை சுத்திகரிப்பான் ஆகியவைகள் ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

வீடு, வீடாக சென்று கரோனா பரிசோதனை

யாருக்காவது கரோனா தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக கரோனா கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கிராமங்களில் இறப்பு, திருமண நிகழ்வுகளில் கூட்டம் அதிகம் கூடாமல் ஊராட்சி மன்ற தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். மருத்துவர்கள் ஆலோசனையின்றி மருந்துகள் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். மாவட்டத்தில் போதுமான அளவு மருத்துவர்கள் பணியில் உள்ளனர். தேவையான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளன" எள மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:இமயமலை உப்பில் இவ்வளவு நன்மைகளா!

ABOUT THE AUTHOR

...view details