மயிலாடுதுறை:தருமபுரம் ஆதீனம் இன்று (மே. 8) செய்தியாளர்களைச் சந்தித்த போது, பட்டினப்பிரவேசம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியிருப்பதாக கூறினார்.
பாரம்பரிய நடைமுறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார், விருப்பப்பட்டுதான் தொண்டர்கள் ஆதீனத்தை சுமக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.