மயிலாடுதுறை:தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தமிழ் புத்தாண்டு ஆசி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குருமகா சன்னிதானம் வாழ்த்து செய்தியில், "பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது போல் கடந்த சில ஆண்டுகள் உலக மக்கள் அனைவரையும் பெரிய தொற்றுநோய் உருவாகி இன்னலுக்கு ஆளாக்கியது.
பிறந்திருக்கும் தமிழ் புத்தாண்டான சுபகிருது ஆண்டு. பொதுமக்கள் நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டு தொழில்வளம், பொருளாதாரம் வளம் பெருகும் ஆண்டு. வீடுகளில் தொழில் வளம் செல்வம் பெருகும் ஆண்டாகவும் அமையட்டும்.
தமிழ் புத்தாண்டு வாழ்த்து இந்த ஆண்டுக்கான தனிபாடலில், மழை மிகுதியாக உண்டாகும், விளைச்சல் அதிகரிக்கும், மக்கள் சுபிட்சம் பெறுவர். நோய்கள் நீங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் இறைவன் அருளால் மக்கள் எல்லா நலமும் பெற்று வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல செந்தமிழ் சொக்கநாதப் பெருமானை வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'அலங்காரப் பிரியர் மட்டுமல்ல... சமத்துவ நாயகரும்கூட...' - கள்ளழகரின் மற்றொரு பக்கம்!