மயிலாடுதுறை:தருமபுரம்ஆதினத்தின் பட்டினப் பிரவேச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிவிகை பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. தருமபுரம் ஆதீன 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பல்லக்கில் அமர்ந்தார்.
பக்தர்கள் பல்லாக்கை சுமந்து நான்கு ரத வீதியில் உலா செல்கின்றனர். முன்னதாக, மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், புளியாட்டாம், கிராமிய கலை நிகழ்ச்சி மற்றும் பக்கதர்கள் புடைசூழ தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் அமர்ந்தார்.