காவிரி நதி பாயும் அனைத்து ஊர்களிலும் ஆடிப்பெருக்கு உற்சவம் இன்று(ஆகஸ்ட்.03) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவிரி அன்னையை வரவேற்று விவசாயம் செழிக்கவும் வாழ்வு வளம் பெற்று நலமுடன் வாழவும் பொதுமக்களால் ஆடிப்பெருக்கு விழா ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த பூம்புகார் கடலில் காவிரி சங்கமத்தில் ஆடிப்பெருக்கு விழா அதிகாலை முதல் ஏராளமான பொதுமக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.