நாகப்பட்டினம் மயிலாடுதுறை அருகே உள்ள ஆக்கூர் முக்கூட்டு பகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் மயில்வாகனன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏழு உட்பிரிவினரை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம்! - தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் ஏழு உட்பிரிவினரை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தரங்கம்பாடி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் நடத்திய தமமுக
அதில், பள்ளன், குடும்பன், தேவேந்திர குலத்தான், பண்ணாடி, கடையன், காலாடி, வாதிரியார் ஆகிய ஏழு உட்பிரிவினரை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தினர்.
மேலும், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.