தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2,000 ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரின்றி கருகிவருவதால் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை! - samba cultivation in Mayiladuthurai

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகாவில் 2,000 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் தண்ணீரின்றி கருகிவருவதால் அப்பகுதி விவசாயிகள் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

தண்ணீரின்றி கருகிவரும் சம்பா பயிர்கள்
தண்ணீரின்றி கருகிவரும் சம்பா பயிர்கள்

By

Published : Sep 18, 2020, 9:03 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கடைமடை பகுதியான தரங்கம்பாடி தாலுகாவில் 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

அதில் மஞ்சளாறு, கூடலாறு ஆற்றுப் பாசனத்தை ஆதாரமாகக் கொண்டு காழியப்பநல்லூர், டி மணல்மேடு, தில்லையாடி, காட்டுச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நேரடி நெல் விதைப்பு முறையில் சம்பா நடவு செய்யப்பட்டுள்ளது.

ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் ரூபாய் வீதம் செலவு செய்து நடவுசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாததால் விதைக்கப்பட்ட பயிர்கள் அனைத்தும் முளைக்காமல் காய்ந்து கருகிவருகிறது.

அருள்தாஸ் - கூடலாறு, மஞ்சளாறு சாகுபடி சங்க தலைவர்

விதைவிட்டு 10 நாள்களாகியும் ஆற்றில் தண்ணீர் வராததால் உரிய நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால் தமிழ்நாடு அரசு மேட்டூரில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க:அமராவதி ஆற்று நீர் கடைமடை வந்து சேரவில்லை - கரூர் விவசாயிகள் வேதனை!

ABOUT THE AUTHOR

...view details