தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா சூழல்: வெறிச்சோடியது தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை

நாகப்பட்டினம்: கரோனா வைரஸ் எச்சரிக்கை காரணமாக தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மூடப்பட்டதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வராததால் வெறிச்சோடிக் காணப்பட்டது.

Danish Fort, Tharangambadi closed due to Corona Virus
Danish Fort, Tharangambadi

By

Published : Mar 19, 2020, 7:10 AM IST

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் நோய் பரவிவருவதால் மத்திய அரசு கரோனா வைரஸ் நோய் தொற்றைப் பேரிடராக அறிவிப்பு செய்துள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கரோனா எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களையும் அரசு வரும் 31ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தை மூட வரும் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

வெறிச்சோடியது தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை

அதேபோல கடற்கரையில் மாலை நேரம் எப்பொழுதும் கூட்டமாக இருக்கும், கரோனா வைரஸ் பீதியால் கடற்கரைக்கு யாரும் வராததால் தரங்கம்பாடி கடற்கரை வெறிச்சோடிக் காணப்படுகிறது.

இதையும் படிங்க:கரோனா: கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பக்தர்களுக்குத் தடை

ABOUT THE AUTHOR

...view details