மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் கி.பி.1620ஆம் ஆண்டு டேனிஷ் நேவி கேப்டன் ரோலண்ட் கிராப், என்பவரால் தரங்கம்பாடி கடற்கரையில் டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது. தற்போது இந்த கோட்டை தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வு துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த கோட்டையில் போர் வீரர்கள் தங்கும் அறை, ஆயதக்கிடங்கு, சமையல் அறை அருங்காட்சியகமும் உள்ளது. இரண்டுமுறை இக்கோட்டையானது பழமை மாறாமல் புதுப்பிக்கபட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் சுற்றுலா தலங்களை மூட அரசு உத்தரவிட்டதால், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையும் மூடப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வுகளினால் சுற்றுலா தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டதால் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இன்று (டிச.16) தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டது.
இதனால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். திறந்த முதல் நாளில் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து சென்றனர். பார்வையாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர், பரிசோதனை செய்யப்பட்டு சானிடைசர் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:கைலாசாவுக்கு 3 நாட்கள் இலவச விசா - நித்யானந்தாவின் அதிரடி அறிவிப்பு