நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த கருவேலங்கடை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பால் வியாபாரி சுந்தரபாண்டியன் (39). இவர், நாகையில் பாபாக்கோயில் பகுதியிலுள்ள வீடுகளுக்கு பால் விற்பனை செய்துவருகிறார்.
இந்நிலையில், அங்குள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியிடம் சுந்தரபாண்டியன் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.