மயிலாடுதுறை:வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டிலுள்ள கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தின் இரண்டு நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் கடல் அலைகள் வேகமாக கொந்தளிப்பு சீற்றத்துடன் காணப்படுகிறது.
மேலும், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி, சின்னங்குடி, பூம்புகார், வானகிரி, சந்திரபாடி, மாணிக்கப்பங்கு, குட்டியாண்டியூர், பழையார், திருமுல்லைவாசல் உள்ளிட்ட 28 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமலும் தங்களது உடைமைகளையும், பைபர் படகுகள், விசைப் படகுகளையும் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.