தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சரக்கில் சயனைடு கலந்து தம்பியை கொன்ற அண்ணன்.. மயிலாடுதுறை வழக்கில் திடீர் திருப்பம்! - property issue

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் மதுபானத்தைக் குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில், பழனி குருநாதனின் சகோதரர்கள் மதுவில் சயனைடு கலந்து இருவரைக் கொன்றது தெரியவந்துள்ளது.

சொத்து பிரச்சனையால் மதுவில் சயனைடு கலந்து கொலை!அண்ணன் கைது
சொத்து பிரச்சனையால் மதுவில் சயனைடு கலந்து கொலை!அண்ணன் கைது

By

Published : Jun 15, 2023, 7:46 AM IST

மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா, பெரம்பூர் காவல் சரகம் தத்தங்குடியை சேர்ந்தவர் பழனி குருநாதன்(50) இவர், மங்கைநல்லூர் மெயின்ரோட்டில் கொல்லுபட்டறை வைத்து நடத்தி வந்தார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பூராசாமி(65) என்பவர் வேலைபார்த்து வந்தார். இந்நிலையில், ஜூன் 12ம் தேதி மாலை பழனி குருநாதன், பூராசாமி ஆகியோர் பட்டறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். பின்னர் அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பின்னர், பெரம்பூர் போலீசார் இதனை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்தனர். மயங்கி கிடந்த இடத்தில் அரசு டாஸ்மாக் மதுபாட்டில் ஒன்று திறக்கப்படாமலும், ஒரு காலிபாட்டிலும் கிடந்ததால் டாஸ்மாக் சரக்கு குடித்ததால் தான் இரண்டு பேரும் இறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனால் 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தஞ்சை தடயவியல் ஆய்வக அதிகாரிகள் டாஸ்மாக் மதுபாட்டிலை சோதனை செய்ததில் மதுபானத்தில் சயனைடு கலந்திருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் விசாரணையில் சொத்துத் தகராறு காரணமாக உயிரிழந்த பழனி குருநாதனின் அண்ணன்கள் (முதல்தாரத்து மகன்கள் மனோகர், பாஸ்கர்) கொலை முயற்சி செய்ததாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஜூன் 13ல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:கழிவுநீர் அகற்றுவதில் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை தண்டனை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

போலீஸ் விசாரணையில் பழனி குருநாதனுக்கும் அவரது சகோதரர்களுடன் (முதல் தாரத்து மகன்கள்) சொத்து பிரச்சனை இருந்தது தெரியவந்ததை அடுத்து சகோதரர்கள் பாஸ்கரன், மனோகர் ஆகியோரை மயிலாடுதுறை காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், பழனி குருநாதனை கொலை செய்ய திட்டமிட்டு மயிலாடுதுறையில் நகை தயாரிக்கும் தொழில் செய்துவரும் உறவினர் ஒருவரிடம் மரத்தை பட்டுபோக செய்ய வேண்டும். அதற்காக சயனைடு வேண்டுமென்று கேட்டுவாங்கி வந்து டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கி அதில் சயனைடு கலந்துள்ளார் பாஸ்கரன். பாட்டில் சீல் உடைக்காமல் இருப்பது போல் தெரியவேண்டும் என்பதற்காக பெவிக்கூயிக் போட்டு ஒட்டி கொல்லுபட்டறையில் யாருக்கும் தெரியாமல் சென்று மதுபாட்டில்கள் வைத்துவிட்டு வந்ததாக பாஸ்கரன் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இச்சம்பவத்தில் பாஸ்கரன்(52) மட்டுமே தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து பெரம்பூர் போலீசார் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து பாஸ்கரனை கைது செய்தது. செம்பனார்கோயில் அருகே திருச்சம்பள்ளியில் அமைந்துள்ள தரங்கம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் மயிலாடுதுறை பொதுமக்களிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:வனத்துறை ஜீப்பை தூக்கி வீசிய யானை.. கோவையில் மீண்டும் அட்டகாசம்!

ABOUT THE AUTHOR

...view details