தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அச்சத்தில் மக்கள் மீது முதலமைச்சர் பழி சுமத்துகிறார்- முத்தரசன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாகை: கரோனா தடுப்பு பணியில் தோற்றுவிட்டோம் என்ற பயத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் மீது பழியை சுமத்துகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்

By

Published : May 1, 2020, 3:42 PM IST

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாகையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சிபிஐ மற்றும் சிஐடியு கொடிகளை இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முத்தரசன், "கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் என உழைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. கரோனா பாதிப்புகள் குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில் விமர்சனம் செய்வது ஜனநாயக கடமை. பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் எது சொன்னாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது கருத்துரிமையை பறிக்கும் செயல்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்

தமிழ்நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கரோனா தடுப்புப் பணியில் தோற்றுவிட்டோம் என்ற பயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கரோனா பாதிப்புக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்காததுதான் காரணம் என மக்கள் மீது பழி சுமத்துவது நியாயம் இல்லை. மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீடிக்குமா? என்பதை அரசு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்” என்றார்.

இதையும் பார்க்க: 'தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பா?' - முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details