மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின், வாக்கு எண்ணும் மையம், மன்னம்பந்தல் தனியார் (ஏவிசி) கல்லூரியில் அமைக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, தேர்தல் நடத்தும் அலுவலரும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியருமான பிரவின் நாயர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆகியோர் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின்நாயர்-செய்தியாளர் சந்திப்பு பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவின் நாயர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஏவிசி கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். கரோனா தொற்றால் மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் இந்த தேர்தலில் கூடுதலாக 350 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதனால் 2 ஆயிரம் தேர்தல் அலுவலர்கள் கூடுதலாக தேவைப்படுகிறனர். 9 ஆயிரம் தேர்தல் அலுவலர்கள், 3 ஆயிரம் காவல் துறையினர் என்று 12 ஆயிரம் பேர் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வாக்களிக்கும் இயந்திரம் மூலம் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையாக, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், வாக்காளர்கள் கையில் உறை அணிந்து வாக்களிக்க, கையுறை வழங்கப்படுகிறது.
நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின்நாயர்-செய்தியாளர் சந்திப்பு வாக்குச்சாவடிகளை சோதனையிட, 36 வாகனங்களில் பறக்கும் படையினர் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்படும். 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள், மாற்றுதிறனாளிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் வாக்குகள் அளிப்பதற்கான விண்ணப்பம் அளிக்கப்படும்.
அவர்கள் விரும்பினால் தபால் வாக்கு அளிக்கலாம் இல்லை என்றால் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்கலாம். கரோனா தொற்று காரணமாக வாக்கு எண்ணும் மையங்களை அதிகரிப்பதற்கும், டேபிள்கள் அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி அதிகரித்திருப்பதால், இயந்திரம் அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பாக வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மார்ச் 16ஆம் தேதிக்குள் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கப்படும். இறுதி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டால், அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்கள் இறுதிநேரத்தில் தனியாக வந்து வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்கள் அதிகரித்திருப்பதால் வாக்கு எண்ணிக்கை தினத்தில் 20 சதவிகிதம் நேரம் கூடுதலாகும்” என்றார். இதில் டிஆர்ஓ முருகதாஸ், ஆர்.டி.ஓ.பாலாஜி, டிஎஸ்பி அண்ணாதுரை மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: நாங்கள் ஸ்வீட் பாக்ஸ் கேட்கும் கட்சி இல்லை - திருமாவளவன் பேச்சு