தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணிக்கூண்டு கடிகாரத்தை சொந்த செலவில் சரிசெய்த கவுன்சிலர் - பொதுமக்கள் பாராட்டு! - nagai latest news

மயிலாடுதுறையின் பாரம்பரிய அடையாளச் சின்னமாக விளங்கும் மணிக்கூண்டு கடிகாரத்தை சொந்த செலவில் 23 வயது பட்டதாரி இளைஞரான நகரமன்ற உறுப்பினர், சரிசெய்துள்ள நிலையில் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சொந்த செலவில் சரிசெய்த கவுன்சிலர்
சொந்த செலவில் சரிசெய்த கவுன்சிலர்

By

Published : Mar 11, 2022, 10:06 PM IST

மயிலாடுதுறை கடைவீதியில் நடுநாயகமாக விளங்கும் மணிக்கூண்டு 1943-ஆம் ஆண்டு கட்டப்பட்டு, அப்போதைய சென்னை மாநில ஆளுநர் ஹோப் என்ற வெள்ளைக்காரரால் திறந்து வைக்கப்பட்டது.

வெற்றியின் சின்னம்

உலகப் போரில் இங்கிலாந்து தொடர்ந்து தோல்வி அடைந்தது. போர் நடந்த எல்லா இடங்களிலும் ஜெர்மனி வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதன்முறையாக டுனீசியாவில் நடந்த போரில் ஜெர்மனிக்கு எதிராக, இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் நினைவுச்சின்னமாக மயிலாடுதுறை மணிக்கூண்டை அப்துல் காதர் என்பவர் கட்டினார்.

அதன்பின்னர் மயிலாடுதுறையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இந்த மணிகூண்டு மாறிவிட்டது. அந்த காலத்தில் இந்த மணிக்கூண்டில் உள்ள கடிகாரத்தைப் பார்த்தே மக்கள் நேரத்தை தெரிந்துகொண்டனர். இதில் உள்ள கடிகாரம் கடந்த 6ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருந்தது.

சொந்த செலவில் சரிசெய்த கவுன்சிலர்

இதுதொடர்பாக பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அப்பகுதி 16ஆவது வார்டு திமுக நகரமன்ற உறுப்பினரான 23 வயது பட்டதாரி இளைஞரான சர்வோதயன் என்பவர் தனது சொந்த செலவில் மணிகூண்டில் உள்ள கடிகாரத்தை சரிசெய்து கொடுத்துள்ளார்.

மேலும் மணிக்கூண்டில் பல ஆண்டுகளாக எரியாமல் இருந்த மின் விளக்கையும் அவர் சரி செய்துதந்தார். இவரது செயலை பொதுமக்கள் பாராட்டினர்.

இதையும் படிங்க : லேடி சூப்பர் ஸ்டாருடன் செல்ஃபி எடுத்த சென்னை மேயர் - 90’ஸ் கிட்ஸ் என்பதை நினைவூட்டிய தருணம்

ABOUT THE AUTHOR

...view details