நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 1,570 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 16 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில் 865 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 689 பேர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நீதிமன்றம் ஊழியருக்குக் கரோனா உறுதி - Covid-19
நாகப்பட்டினம்: மாவட்ட நீதிமன்ற ஊழியருக்குக் கரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினால், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள, மாவட்ட அமர்வு நீதிமன்றம், மாற்று தீர்வு மையம், குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடங்கள், அலுவலக அறைகள் முழுவதும் இன்று (ஆகஸ்ட் 17) கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
அதே சமயம் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகள், வழக்கறிஞர்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.