தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் மழையால் குறுவை அறுவடைக்குப் பாதிப்பு - விவசாயிகள் கவலை - Impact of Rabi crop in Mayiladuthurai

மயிலாடுதுறை: குறுவை அறுவடை செய்யப்பட்டுவரும் இந்த வேளையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அறுவடைப் பணி பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறையில் மழை
மயிலாடுதுறையில் மழை

By

Published : Jul 20, 2020, 4:55 PM IST

மயிலாடுதுறையில் இன்று (ஜூலை 20) காலை லேசான மழை பெய்ததையடுத்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மதியம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதேபோல், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம், செம்பனார்கோவில் போன்ற பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

குறுவை அறுவடை செய்யப்பட்டுவரும் இந்த வேளையில், மழை பெய்துள்ளதால், பயிர்கள் சாயும் என்பதாலும் அறுவடைப் பணி பாதிப்பு ஏற்படும் என்பதாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மழையில் மூழ்கிய எலி வலையிலிருந்து குட்டிகளை காப்பாற்றிய தாய் எலி

ABOUT THE AUTHOR

...view details