மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு அண்ணா நகரைச் சேர்ந்தவர் முருகன் (40). இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம் குடும்பத்தினருக்கும் இடையே வேலி தகராறு இருந்துவந்துள்ளது. இந்நிலையில், முருகனின் மகளான கல்லூரி மாணவி மணிமேகலை (19) வீட்டில் மீதமிருந்த பொங்கல், கரும்புகளை தனது வீட்டின் வேலியோரம் வீசியுள்ளார்.
இதனைக்கண்ட பன்னீர்செல்வத்தின் மகன் கார்த்தி மணிமேகலையிடம் ஆபாசமாக சைகை செய்து திட்டியுள்ளார். இது குறித்து மணிமேகலை தன் தாயார் ராதிகாவிடம் கூறியதையடுத்து ராதிகா கார்த்தியின் சகோதரர் ரஜினிகாந்திடம் முறையிட்டுள்ளார்.
ஆனால், ரஜினிகாந்தும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதில், மனமுடைந்த மணிமேகலை வீட்டில் அழுதபடி இருந்துள்ளார். அவரை சமாதானப்படுத்திய ராதிகா பின்னர் மயிலாடுதுறைக்கு ஜெராக்ஸ் எடுப்பதற்காகச் சென்றுள்ளார்.
அவமானத்தால் அழுதபடி வீட்டிலிருந்த மணிமேகலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இது தொடர்பான வாட்ஸ்அப் பதிவுகளை தனது சகோதரர்களுக்கு அனுப்பிவிட்டு, வீட்டில் புடவையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். வெளியில் சென்றிருந்த ராதிகா திரும்பிவந்து பார்த்தபோது தனது மகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தற்கொலை செய்யும் எண்ணமிருந்தால் ஒரு ஐந்து நிமிடம் இவர்களுடன் செலவிடுங்கள் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல் துறையினர், மணிமேகலையின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மணிமேகலையை தற்கொலைக்குத் தூண்டிய கார்த்தி (37), ரஜினிகாந்த் (40) ஆகியோரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
கைதுசெய்யப்பட்ட சகோதரர்கள் இதையும் படிங்க: பெண் காவலரை திருமணம் செய்துகொண்ட இளைஞர் தற்கொலை!