தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துப்புரவு பணியாளர்களுடன் கைகோர்த்த மாவட்ட ஆட்சியர்! - nagai collector cleaning waste

நாகை: டெங்கு, மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்தும் முயற்சியில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து குப்பைகளை அகற்றும் பணியில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் ஈடுபட்டார்.

collector cleaning

By

Published : Oct 24, 2019, 2:25 PM IST

வடகிழக்கு பருவமழை காலங்களில் கொசுக்களின் எண்ணிக்கை அதிகமாகி டெங்கு, மலேரியா என பல்வேறு வகையான காய்ச்சல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரவீன் நாயர் கொசுக்கள் உருவாகக்கூடிய சூழல் ஏற்படுத்தும் குப்பைகள், செடிகள் உள்ளிட்டவற்றை துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

தூய்மை பணியில் ஆட்சியர் பிரவீன் நாயர்

அப்போது பேசிய ஆட்சியர், 'மக்கள் அனைவரும் தங்கள் இருக்கும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதன்மூலம் நோய் உண்டாவதை தடுக்கலாம். ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களும் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியில் மாவட்ட ஆட்சியருடன், மாவட்ட வருவாய் அலுவலர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்களும் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலி!

ABOUT THE AUTHOR

...view details