தமிழ்நாடு

tamil nadu

ரிசர்வ் வங்கி விவகாரம்: காவிரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

By

Published : Jul 31, 2020, 8:39 PM IST

நாகப்பட்டினம்: கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்வதை கண்டித்து, காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு செல்லும் மத்திய அரசின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (ஜூலை 31) நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதை உடனே தடுத்து நிறுத்தி கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றும், குறுவை சம்பா பணியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்றும், குறுவை தொகுப்பு திட்டத்தை விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: கூட்டுறவு வங்கிகளை கையகப்படுத்த எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details