மயிலாடுதுறை தாலுகா மொழையூர் ஊராட்சியில் அய்யாவையனாறு வெள்ளத்தால் 260 ஹெக்டேர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி க.பழனிச்சாமி இன்று இரவு பார்வையிட்டார்.
இரவு நேரத்தில் முதலமைச்சர் பார்வையிடுவதற்காக வந்ததால் அப்பகுதி முழுவதும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தது.
பின்னர் 7 நாள்களுக்கு மேலாக தண்ணீரில் மூழ்கியுள்ள கதிர்விட்ட நாற்றுகளை, தண்ணீரில் இறங்கி எடுத்துவந்த விவசாயிகள் முதலமைச்சரிடம் காண்பித்து வேதனையடைந்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார் தொடர்ந்து விவசாயிகளின் கருத்துக்களை கேட்ட முதலமைச்சர், விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி, சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:இடுக்கி நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி வழங்கிய அமைச்சர்