இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் பயிற்சி தேர்வுக்காக தயார் நிலையில் இருந்த போது அச்சம் மற்றும் மன உளைச்சல் காரணமாக நேற்று (செப். 12) ஒரே நாளில் மூன்று மாணவ, மாணவிகள் தற்கொலை செய்திருப்பது தமிழ்நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
'நீட் தற்கொலைகளுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்' - தமிமுன் அன்சாரி - 50 லட்சம் இழப்பீடு
நாகப்பட்டினம்: நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் ஜோதி ஸ்ரீ துர்கா, தருமபுரி மாவட்டத்தில் ஆதித்யா, நாமக்கல் மாவட்டத்தில் மோதிலால் என மூன்று பிஞ்சுகளை ஒரே நாளில் பறிகொடுத்திருக்கிறோம். வண்ணத்துப்பூச்சிகளாய் சிறகடிக்க வேண்டியவர்கள் சவப்பெட்டிகளில் மாண்டு கிடப்பது வேதனையளிக்கிறது. இந்தத் தற்கொலைகளுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.
எதிர்கால இளவல்களை இழந்து நிற்கும் இக்குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு அளிக்கும் உதவிகள் போதாது. அவற்றை மும்முடங்கு உயர்த்தி கொடுக்க வேண்டும். இந்தத் தற்கொலைகளுக்கு காரணமான மத்திய அரசு, இக்குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாடு மாணவர் சமுதாயம் தலை நிமிர்ந்து போராட தயாராக வேண்டிய தருணத்தில், தற்கொலை எண்ணங்களை தூக்கியெறிய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.