குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவைக் கண்டித்தும் அதனை திரும்பப் பெறக் கோரியும் நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சங்கரன்பந்தலில் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து தேசிய கொடி ஏந்தி இஸ்லாமியர்கள் பேரணி! - தேசிய கொடி ஏந்தி போரணி சென்ற இஸ்லாமியர்கள்
நாகப்பட்டினம்: குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிராக 100 அடி நீள தேசிய கொடி ஏந்தி இஸ்லாமியர்கள் பேரணியாகச் சென்றனர்.
flag
இலுப்பூர் ஊராட்சியில் தொடங்கிய இந்தப் பேரணியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக 100 அடி நீள தேசிய கொடி கையை தலைக்கு மேல் உயர்த்தி பிடித்தவாறு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்துள்ளதை திரும்பப் பெற வலியுறுத்திச் சென்றனர்.
முக்கிய வீதிகளின் வழியாகச் சென்ற பேரணி சங்கரன்பந்தல் பள்ளிவாசலில் முடிவடைந்தது. அங்கு தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்கள் 3000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.