தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப்பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 10 பேர் காயம் - பயணிகள் சிறு சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

சீர்காழி புறவழிச்சாலையில் புதுச்சேரி அரசு பேருந்தும், தமிழ்நாடு அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.

Etv Bharatஅரசுப்பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து- உயிர்சேதம் இல்லை
Etv Bharatஅரசுப்பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து- உயிர்சேதம் இல்லை

By

Published : Aug 5, 2022, 9:20 AM IST

மயிலாடுதுறை: புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சீர்காழியில் இருந்து சிதம்பரம் செல்லும் புறவழிச் சாலை கோவில்பத்து அருகே எதிரே வந்த தமிழ்நாடு அரசுப்பேருந்துடன் பேருந்து மோதியது. இந்த விபத்தில் இரண்டு அரசு பேருந்துகளிலும் பயணித்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சிறு சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.

காயம் அடைந்த அனைவரையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விபத்தால் சீர்காழி புறவழிச் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரசுப்பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து- உயிர்சேதம் இல்லை

நான்கு வழி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வரும் நிலையில், அதற்காக பாலம் கட்டப்பட்டு வருகிறது. இவ்விடத்தில் சாலை குறுகலாக உள்ளதால் இரண்டு பேருந்துகளும் ஒரே நேரத்தில் கடக்க முற்பட்டபோது விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இரண்டு யானைகளுக்கிடையே மோதல்; ஒரு யானை உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details