மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க வலியுறுத்தி, லோடு ரிக்ஷா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவரும், மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகவீரபாண்டியன் தலைமையேற்று பேரணியை துவக்கி வைத்தார்.
லோடு ரிக்ஷா தொழிலாளர்கள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ! - black flag
நாகப்பட்டினம்: மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க வலியுறுத்தி, லோடு ரிக்ஷா தொழிலாளர்கள் தங்கள் ரிக்ஷாக்களில் கருப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
rickshaw
இதில் ரிக்ஷா தொழிலாளர்கள் கலந்துகொண்டு, தங்கள் வாகனங்களில் தனி மாவட்டக் கோரிக்கை அடங்கிய பேனர்களையும், கருப்புக் கொடியையும் கட்டியவாறு தங்கள் தினசரி பணிகளில் ஈடுபட்டனர்.