மயிலாடுதுறை:பெட்ரோல், டீசல் விலையை உயர்வைத் தமிழ்நாடு அரசு குறைக்கக் கோரி மயிலாடுதுறை மாவட்டம் மண்மேட்டில் பாஜகவினர் மாட்டுவண்டி பேரணி நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்ட பாஜக விவசாய அணித் தலைவர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற பேரணியில், மாநிலச்செயலாளர் தங்க.வரதராஜன் கலந்து கொண்டு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத தமிழ்நாடு அரசைக் கண்டித்து முழக்கமிட்டு, 50-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டியில் பேரணியாக வந்தார்.
இந்நிலையில், மணல்மேல் காவல் துறையினர் மாட்டுவண்டி பேரணிக்கு அனுமதி இல்லை, மீறி நடத்தினால் கைது செய்வோம் என பேரணியைத் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.