நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை புனுகீஸ்வரர் கோயில் கீழவீதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பாதாள சாக்கடை கழிவு நீர் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பகுதி குடியிருப்புவாசிகள் நகராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. இதையடுத்து, பாதாளசாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கும் இடத்தில் தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளரும், நகர பாஜக தலைவருமான மோடி கண்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் - நகராட்சியை கண்டித்து பாஜக போராட்டம் - நாகப்பட்டினம் மயிலாடுதுறை
நாகப்பட்டினம்: சாலையில் பெருக்கெடுத்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத மயிலாடுதுறை நகராட்சியை கண்டித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
BJP protest for Sewage overflowing on the road in Mayiladuthurai
இப்போராட்டத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் உள்ளிட்ட பாஜகவினர், குடியிருப்புவாசிகள் இணைந்து மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு, கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.