தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திருமாவின் கருத்துகளை யாரும் நியாயப்படுத்த முடியாது!' - இல.கணேசன் செய்தியாளர் சந்திப்பு

நாகப்பட்டினம்: உலக நாடுகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு அவையில் காணொலிக் காட்சி மூலமாக திருமாவளவன் தெரிவித்த கருத்துகளை யாரும் நியாயப்படுத்த முடியாது என பாஜக மூத்தத் தலைவர் இல. கணேசன் தெரிவித்தார்.

nagapattinam
nagapattinam

By

Published : Oct 27, 2020, 9:54 PM IST

Updated : Oct 27, 2020, 10:19 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் விஷ்வ ஹிந்து பரிஷத் தென் தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜகவின் மூத்தத் தலைவர் இல. கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "திருமாவளவன் இல்லாத ஒரு கருத்தை இருப்பதாக பொய்யுரைத்து பேசியிருக்கிறார். உலக நாடுகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு அவையில் காணொலிக் காட்சி மூலமாக திருமாவளவன் தெரிவித்த கருத்துகளை யாரும் நியாயப்படுத்த முடியாது.

விவேகானந்தர் சிகாகோவில் பேசும்போது உங்கள் நாட்டில் நீங்கள் தாயைவிட அனைவரையும் மனைவியாகப் பார்ப்பீர்கள், எங்கள் நாட்டில் மனைவியைத் தவிர அத்தனை பெண்களையும் நாங்கள் தாயாக பார்ப்போம் எனப் பெருமிதத்தோடு பேசினார்.

திருமாவளவனை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகள்

விவேகானந்தர் பேசியது உச்சம், திருமாவளவன் பேசியது தாழ்வு. எவ்வளவு மோசமான தாழ்வான ஒரு பொய்யான செய்தி பேசுவதற்கு நாக்கு கூசுகிறது. ஏன் அவர் அப்படி பேசினார் எனப் புரியவில்லை. எதிர்க்கட்சிகள் இதனைக் கண்டித்திருக்க வேண்டாமா? நாட்டு மக்கள் உணர்வைவிட ஓட்டுதான் முக்கியம் என்று கூட்டணிக் கட்சிகள் கருதுகிறார்கள் இது சரியான போக்கு அல்ல" என்றார்.

இதையும் படிங்க:’ஆட்சியைக் காக்க முள்ளிவாய்க்காலில் உயிர்பலி கொடுத்தவர் ஸ்டாலின்'

Last Updated : Oct 27, 2020, 10:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details