பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்த நாளை பாஜகவினர் இன்று (செப்டம்பர் 17) நாடு முழுவதிலும் கொண்டாடிவருகின்றனர். அவரது பிறந்தநாளுக்கு் தலைவர்கள், பொதுமக்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
மோடியின் 70ஆவது பிறந்தநாள்: மீன் வழங்கி கொண்டாடிய பாஜக மீனவர் அணி! - தமிழ்நாடு பாஜக
நாகப்பட்டினம்: பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாளை பாஜகவினர் மீன் வழங்கி கொண்டாடினர்.
மோடி
இந்நிலையில், நாகையில் பிரதமரின் பிறந்தநாளை நாகை பாஜக மீனவரணியினர் பொதுமக்களுக்கு மீன் வழங்கி வித்தியாசமான முறையில் கொண்டாடினர். இதில், பாஜக மாவட்டத் தலைவர் நேதாஜி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு 100 கிலோ மீன்களை இலவசமாக வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில மீனவர் அணி துணைத் தலைவர் ஜீவா, மாநில மீனவரணி துணைச் செயலாளர் சுகந்தி குமரவேலு உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.