தமிழ்நாடு, புதுச்சேரியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவைப் பயன்படுத்தி, காரைக்காலிலிருந்து நாகைக்கு அதிகளவு மது பாட்டில்கள் கடத்தப்படுவதாகக் காவல் துறையினருக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, நாகப்பட்டினம் தனிப்படை காவல் துறையினர் வாஞ்சூர் சோதனைச் சாவடியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வேகமாக வந்த இன்னோவா கார் ஒன்றைக் காவல் துறையினர் தடுத்தபோதும், கார் நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து, காரை துரத்திச் சென்ற காவல் துறையினர், வாஞ்சூர் சோதனைச் சாவடி அருகே காரை மடக்கிப் பிடித்தனர்.