மயிலாடுதுறை: சீர்காழியைச் சேர்ந்த பார் கவுன்சில் செயலாளரும், வழக்கறிஞருமான ராஜேஷ் என்பவர் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தனியார் பேருந்து மீது குடிபோதையில் ராஜேஷ் காரை ஓட்டிச் சென்று தனியார் பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் சீர்காழி காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ராஜேஷ் மீது புகார் அளித்தனர். புகாரின் பேரில் ராஜேஷ் விசாரணைக்காக காவல் நிலையம் வந்தார்.
காவலர்களுக்கு மிரட்டல் விடுத்த வழக்கறிஞர்
குடிபோதையில் வந்தவர் நேராக காவல் நிலையத்திற்குள் புகுந்த காவல் ஆய்வாளர் அறைக்குச் சென்றார். இதனைக் கண்ட காவலர் ஒருவர் அவரை அழைத்து கேள்வி கேட்டார். ஆனால், ராஜேஷ் தான் ஒரு வழக்கறிஞர் எனக் கூறி, காவலரையே திருப்பி கேள்வி கேட்கத் தொடங்கினார்.