நாகப்பட்டினத்தில் மாட்டு இறைச்சி சாப்பிட்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டதால் இளைஞர் தாக்கப்பட்ட விவகாரத்தினால் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் நாகபட்டினத்திற்கு வந்துக் கொண்டிருந்தார். அவரை காரைக்காலிலே காவல் துறையினர் நிறுத்தினர். பதற்றம் நீடிப்பதால் திரும்பச் செல்லும்படியும் அறிவுறுத்தினர்.
'மாட்டு இறைச்சியை உண்டு பதிவிடுவதால் இந்துக்கள் மனம் புண்படுகிறது' - அர்ஜூன் சம்பத் - stalin
நாகப்பட்டினம்: "சமூக வலைத்தளங்களில் மாட்டு இறைச்சியை உண்டு பதிவிடுவதால் இந்துக்கள் மனம் புண்படுகிறது" என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், “மாட்டிறைச்சி விவகாரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுகிறார். மாட்டு இறைச்சியை உண்பவர்கள் பன்றிக் கறியையும் சேர்த்து உண்ணுங்கள் பார்க்கலாம். சமூக வலைத்தளங்களில் மாட்டு இறைச்சியை உண்டு பதிவிடுவதால் இந்துக்கள் மனம் புண்படுகிறது.
ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை முன்னிறுத்தி முதலமைச்சராக தமிழ்நாட்டில் வெற்றிப் பெறுவது உறுதி. ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதற்கு ரஜினி இடையூறாக இருப்பார். மும்மொழிக் கொள்கை தமிழர்களுக்கும், தாய்மொழிக்கும் எதிரானது என்ற பொய்யான பரப்புரையை செய்து வரும் நடிகர் சூர்யாவுக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.