தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்ற அரசு அலுவலர்கள்!

நாகப்பட்டினம்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை மாவட்ட தேர்தல் அலுவலர், அரசு அலுவலர்கள் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.

நாகப்பட்டினம்

By

Published : May 21, 2019, 8:04 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 28ஆவது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனோடு சேர்ந்து மே 21ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பயங்கரவாத எதிர்ப்பு நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்ற அரசு அதிகாரிகள்

இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மைய மாநாட்டு கூடத்தில் பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி நிகழ்வு மாவட்ட தேர்தல் அலுவலர் சுரேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் சுரேஷ் குமார், பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழியை வாசிக்க, அதனை மற்ற அரசு ஊழியர்களும் ஏற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details