நாகை மாவட்டம் கங்களாஞ்சேரி பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவலர்கள் இன்று (ஜன. 24) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த காரை மறித்து சோதனை செய்தபோது, சாராய பாக்கெட்டுகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
பாண்டி ஜுஸ் என்று அச்சிடப்பட்டிருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1,000 சாராய பாக்கெட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்த காவலர்கள், கடத்தலில் ஈடுபட்ட காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் பகுதியைச் சேர்ந்த சர்புதினை கைது செய்தனர்.